சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் பெய்த கனமழையால் ஓஎம்ஆர் சாலையில் ஆங்காங்கே மழை நீர் தேங்கி நிற்கிறது.
சென்னை புறநகர் பகுதிகளான சோழிங்கநல்லூர், பெருங்குடி, துரைப்பாக்கம், திருவான்மியூர், பாலவாக்கம், கொட்டிவாக்கம், நீலாங்கரை, செம்மஞ்சேரி, பள்ளிக்கரணை, மேடவாக்கம், ஒட்டியம்பாக்கம், சிறுசேரி, கேளம்பாக்கம் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் நேற்று நள்ளிரவு முதல் பலத்த கனமழை பெய்தது.
நள்ளிரவு தொடங்கிய கனமழை விடியற்காலை வரை தொடர்ந்து பெய்து வந்ததால் காலையில் அலுவலகத்திற்கு செல்லக்கூடியவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகினர். நள்ளிரவு முதல் பெய்த கனமழையால் சென்னை ஓஎம்ஆர் சாலையில் பல்வேறு இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது.
குறிப்பாக செம்மஞ்சேரி ஓஎம்ஆர் சாலையில் மழைநீர் தேங்கி நிற்பதால் வாகன ஓட்டிகள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். சென்னை சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சர்வீஸ் சாலையிலும் மழைநீர் தேங்கி நிற்கின்றனர்.