சென்னை மற்றும் அதன் புறநகரப் பகுதிகளில் நேற்று இரவு முதல் மழை பெய்து வந்த நிலையில், இன்று மீண்டும் பலத்த மழை வேகமெடுக்கிறது.
தொடர்ந்து மழை பெய்து வருவதால் அலுவலகம் செல்வோர் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் நேற்று மாலை தொடங்கிய மழை, தொடர்ந்து பெய்தது. இந்த நிலையில் அதிகாலையில் மழை லேசாக இடைவெளி விட்டிருந்த நிலையில், மீண்டும் 8 மணிக்கு தொடங்கி தொடங்கியருக்கிறது.
சென்னையின் புறநகர்ப் பகுதிகளான கூடுவாஞ்சேரி, பெருங்களத்தூர், வண்டலூர், மண்ணிவாக்கம், ஆவடி, ஊரப்பாக்கம், பள்ளிக்கரணை, சிட்லப்பாக்கம், பெரும்பாக்கம், கேளம்பாக்கம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது.
அதுபோல, சென்னையில், பெரம்பூர், விருகம்பாக்கம், தாம்பரம், ராயப்பேட்டை, புரசைவாக்கம், அரும்பாக்கம், தி.நகர், கோடம்பாக்கம், கோபாலபுரம், சாலிகிராமம், ஆதம்பாக்கம், திருவல்லிக்கேணி, கிழக்கு தாம்பரம், வடபழனி, சைதாப்பேட்டை, அசோக் நகர், திருவான்மியூர், மயிலாப்பூர், வேளச்சேரி, அடையாறு உள்ளிட்ட இடங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது.