நடிகர் மோகன் நடிப்பில் இயக்குனர் விஜய் ஷ்ரி இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘ஹரா’.
ராம் எனும் கதாப்பாத்திரமாக நடித்துள்ள மோகன் ஒரு ஜாலியான அப்பாவாக தன் மகளை வளர்க்கிறார். அந்த மகள் கோவையில் உள்ள கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போது திடீரென தற்கொலை செய்து இறந்துவிடுகிறார். இதனால் மனமுடைந்த மோகன், தனது பெயரை இஸ்லாமிய பெயராக மாற்றிக்கொண்டு தன் மகள் இறப்புக்குக் காரணமானவர்களைத் தேடுகிறார். மகளைக் கொன்றவர்கள் கிடைத்தார்களா? அவரை ஏன் ஒரு காவல் அதிகாரி திடீரென துரத்துகிறார்? என்பதே கதை…
பல வருடங்கள் கடந்தாலும் மோகன் தன்னுடைய எதார்த்த நடிப்பை கொடுத்திருக்கிறார். சமுதாயத்திற்கு ஒரு மெசேஜ் கொடுக்க இயக்குனர் முயற்சித்திருக்கிறார். பின்னணி இசை, ஒளிப்பதிவு ஓகே. இஸ்லாமிய பெயருடன் கள்ளத்துப்பாக்கி வாங்கி தன் மகளின் சாவுக்கு காரணமானவர்களைத் தேடும் பாதையில் நம்மை சோதிக்கிறார் மோகன். யோகி பாபு காமெடி ஒர்கவுட் ஆகவில்லை என்றே சொல்லலாம். கதை களம், சண்டை காட்சி என அனைத்திலும் மேலும் கவனம் செலுத்தி அடுத்த முறை படம் எடுங்கள் இயக்குனர் விஜய் ஷ்ரி அய்யா..
இந்த ஹரா- ஹரோ ஹராராரா……