சென்னை:
உதவித் தொகைக்கான, ‘ஆன்-லைன்’ விண்ணப்ப முறையை எளிமையாக்கவும், கோரிக்கைகளை நிறைவேற்றவும் கோரி, ஆர்ப்பாட்டம் நடத்த, மாற்று திறனாளிகள் திட்டமிட்டுள்ளனர்.
மாற்று திறனாளிகள் சங்க நிர்வாகிகள் கூறியதாவது: தமிழகத்தில், மாற்று திறனாளிகளுக்கு தனித்துறை இயங்கி வருகிறது. மாதாந்திர உதவித்தொகையை, அத்துறை வாயிலாக வழங்க கோரிக்கை விடப்பட்டது. ஆனால், நிர்வாக காரணங்களை காட்டி, சமூக நலத்துறை, வருவாய்த் துறை, மாற்று திறனாளிகள் நலத்துறை என, பல அலுவலகங்களுக்கு அலைக்கழித்து, சமூகப்பாதுகாப்பு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
வருவாய்த் துறை வாயிலாக பட்டுவாடா செய்வதில், சட்ட விதி மீறல்களும், லஞ்ச முறைகேடுகளும் அதிகரித்தன. இதையடுத்து, நீண்ட பேச்சுக்கு பின், ‘ஆன்-லைன்’ விண்ணப்ப முறை அமலுக்கு வந்துள்ளது.இந்த விண்ணப்ப முறையை எளிமைப்படுத்தவும், கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரியும், வரும், 16ம் தேதி, வருவாய் நிர்வாக கமிஷனர் அலுவலகத்திலும், மாவட்டங்களில் கலெக்டர் அலுவலகங்களிலும், போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.