ரூ.1 கோடி மதிப்புள்ள குட்கா சிக்கியது!
செங்குன்றத்தை அடுத்த விளாங்காடுபாக்கம் மல்லிமாநகர் அருகே சப்-இன்ஸ்பெக்டர் சதீஷ்குமார் தலைமையிலான செங்குன்றம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அங்கு சென்று சோதனை செய்த போலீசார், மொத்தம் 4 மினி லாரிகள், 2 லாரிகள் மற்றும் அவற்றில் இருந்த ரூ.1 கோடி மதிப்பிலான குட்காவை பறிமுதல் செய்தனர். இது சம்பந்தமாக ராஜன், கும்மிடிப்பூண்டியை சேர்ந்த கஜேந்திரன் (39), கஜா (33) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
அதேபோல் அரும்பாக்கம் பகுதியில் காரில் 200 கிலோ குட்கா கடத்தி வந்த நுங்கம்பாக்கத்தை சேர்ந்த மனோஜ்குமார் (48) என்பவரை போலீசார் கைது செய்தனர். திருமுல்லைவாயல் அருகே மோட்டார்சைக்கிளில் கஞ்சா கடத்தி வந்த கார்த்திகேயன் (30), கிரிதரன் (22) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.