சென்னை அயனம்பாக்கத்தில் உள்ள UCCK மெட்ரிக் மேல்நிலை பள்ளியில் 100 மாணவ மாணவிகள் ஒன்று சேர்ந்து 100 விதமான உணவுகளை 100 நிமிடத்தில் தயார் செய்து கின்னஸ் சாதனை படைக்க முயற்சி செய்தனர். இந்த நிகழ்ச்சியை UCCK மெட்ரிக் மேல்நிலை பள்ளி நிர்வாகம் மற்றும் அர்ஜுனா வில்வித்தை அகாடமி இணைந்து நடத்தியது. நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக M.கருணாநிதி (Rtd. S.P,D.C), திருமதி. சித்ரா அரவிந்தன் President (T.W.R.P.Association), K. ரத்னசபாபதி தலைமை பயிற்சியாளர் (அர்ஜுனா வில்வித்தை அகாடமி) ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த முயற்சியை பற்றி பள்ளியின் முதல்வர் சுசிலா ஜான் பீட்டர் அவர்கள் கூறுகையில்:

எங்கள் பள்ளியின் மாணவ மாணவிகள் இந்த உணவு முயற்சியில் பங்கேற்றது எங்கள் பள்ளிக்கு மிகவும் பெருமையாக இருக்கிறது. குழந்தைகள் அனைவரும் யூடியூப் பார்த்து அடுப்பே இல்லாமல் உணவுகளை தயார் செய்ய எடுத்த முயற்சியை எங்கள் பள்ளியின் குழு மூலம் தமிழ்நாடு இளம் சாதனையாளர் புத்தகத்தில் பதிவு செய்ய இருக்கிறோம் என்பதை இதன் மூலம் மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன். எங்கள் பள்ளியின் சார்பில் எங்கள் முதல் முயற்சிக்கு உதவிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றி, மாணவ மாணவிகளின் திறமையை மேலும் ஆராய்ந்து தொடர்ந்து சாதனை நிகழ்ச்சி நடத்துவோம் என்று கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here