திண்டுக்கல் மாவட்டம் ரெட்டியார்சத்திரம் ஊராட்சி ஒன்றியம் முருநெல்லிக்கோட்டை ஊராட்சியில் கிராம சபா கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சின்னு என்ற முருகன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக திண்டுக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ப. வேலுச்சாமி ரெட்டியார்சத்திரம் ஒன்றிய குழு தலைவர் சிவகுருசாமி ஒன்றிய குழு துணை தலைவர் ராஜேஸ்வரி தமிழ்செல்வன் கலந்து கொண்டனர்.
கலைஞர் வீடு, வழங்கும் திட்டம் அனைவருக்கும் வீடுகள் வழங்கும் திட்டம், ஜல்ஜீவன் மிஷின் திட்டத்தை மேம்படுத்துவது, பள்ளிக்கல்வித்துறை உழவர் நலத்துறை உள்ளிட்ட அனைத்து மக்களுக்குமான நலத்திட்ட பணிகளை தீர்மானம் செய்வதற்கு கிராம சபையில் பல்வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது ஊராட்சியின் அனைத்து கிராமங்களிலிருந்தும் ஏராளமான போர் கலந்து கொண்டு தங்களுக்குரிய அடிப்படை வசதிகளை கிராம சபையில் முன் வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் திருமலைசாமி வேதா திமுக மேற்கு ஒன்றிய செயலாளர் மணி, வார்டு உறுப்பினர்கள் உள்ளிட்ட ஏராளமான போர் கலந்து கொண்டனர் கிராம சபை கூட்டத்திற்கு வருகை தந்த அனைவருக்கும் ஊராட்சி செயலர் கர்ணன் நன்றி தெரிவித்தார்.