அனைத்து கல்லூரிகளிலும் ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்று தலைமைச் செயலாளர் அறிவித்தார்.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியதால், மாணவர்களின் நலன் கருதி 9, 10, 11ம் வகுப்புகளுக்கு நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டபோதிலும், ஆன்லைன்/டிஜிட்டல் வகுப்புகள் தொடர்ந்து நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளின்படி 12ம் வகுப்பை தொடர்ந்து நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் கல்லூரி நேரடி வகுப்புகளாலும் கொரோனா பரவும் அபாயம் இருந்தது. எனவே, தமிழகத்தில் அனைத்து கல்லூரிகளிலும் நாளை முதல் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்படுவதாக தலைமைச் செயலாளர் அறிவித்துள்ளார். வாரத்திற்கு 6 நாட்கள் ஆன்லைன் வழியில் மட்டுமே வகுப்புகள் நடைபெறும் என்றும் அறிவித்தார்.