டிஎன்பிஎஸ்சி தலைவராக சைலேந்திர பாபுவை நியமித்து தமிழக அரசு அனுப்பிய கோப்புகளை ஆளுநர் ஆர்.என். ரவி திருப்பி அனுப்பினார். 

டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை தமிழக அரசு பின்பற்றவில்லை என ஆளுநர் ஆர்.என். ரவி கோப்புகளை திருப்பி அனுபினார்.

இதோடுமட்டுமின்றி டிஎன்பிஎஸ்சி தலைவர் நியமனத்தில் பின்பற்றப்பட்ட நடவடிக்கை குறித்து விவரங்களை அளிக்குமாறு தமிழக அரசிடம் கேட்டுள்ளார். நியமனம் தொடர்பான அறிவிப்பு வெளிப்படையாக விளம்பரம் செய்யப்பட்டதா என அரசுக்கு ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியுள்ளார். ஜூன் 30ஆம் தேதி ஓய்வு பெற்ற சைலேந்திர பாபுவை டி.என்.பி.எஸ்.சி தலைவராக நியமித்து தமிழக அரசு கோப்புகளை அனுப்பியது.

இது ஒரு புறம் இருக்க, சென்னை நாள் இன்று கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சென்னை மக்களுக்கு பல்வேறு தலைவர்களும் தங்களது வாழ்த்துகளை வெளியிட்டுள்ளனர். அதுபோல, தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி டிவிட்டர் என்ற எக்ஸ் பக்கத்தில் தனது சென்னை நாள் வாழ்த்துகளை வெளியிட்டிருக்கிறார்.

அவரது பதிவில், மெட்ராஸ் தினம் அன்று எனது அன்பான வாழ்த்துகள்! வியக்க வைக்கும் கலாசாரத்தையும் பன்முகத்தன்மை, ஆழமாக வேரூன்றிய ஆன்மீகம் மற்றும் அறிவார்ந்த வலிமை ஆகியவற்றின் பாரம்பரியத்தைக்கொண்டாடுவோம், அதே ஆர்வத்துடனும் அர்ப்பணிப்புடனும் அதை மேலும் முன்னெடுத்துச் செல்வோம் என்று ஆளுநர் ரவி தெரிவித்துள்ளார்.

சென்னை என பெயர் மாற்றம் செய்யப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில், சென்னை நாளில், மெட்ராஸ் தின வாழ்த்துகள் என்று ஆளுநர் தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here