தலையில் அணியும் விக்கில் தங்கம் கடத்த முயற்சி! 

30

தலையில் அணியும் விக்கில் தங்கம் கடத்த முயற்சி! 

துபாய் மற்றும் ஷார்ஜா நகரங்களில் இருந்து, செய ற்கை தலைமுடிக்குள் மறை த்து கடத்திய, 2.77 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கக் கட்டிகளை, சுங்கத் துறையினர் பறிமுதல் செய்தனர்.

ஐக்கிய அரபு நாட்டின், துபாய் நகரிலிருந்து, ‘பிளை துபாய்’ விமானம், நேற்று முன்தினம் இரவு, 7:20 மணிக்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, ராமநாதபுரத்தைச் சேர்ந்த அக்பர் அலி, 39, ரபியுதீன், 26 ஆகிய இருவரின் தலைமுடிகளும் வித்தியாசமாக இருந்தன. அதனால், அவர்களை சோதனையிட்டனர். இருவரும், ‘விக்’ அணிந்திருப்பது தெரிய வந்தது. அதன் உள்ளே மறைத்து வைத்திருந்த, 595 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

இதே விமானத்தில் வந்த, திருச்சியைச் சேர்ந்த நபரின் ஆசனவாயில் இருந்து, 622 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.மற்றொரு சம்பவத்தில், துபாயில் இருந்த வந்த அன்பழகன், 42 என்பவர், காலில் அணிந்திருந்த, ‘சாக்ஸ்’ மற்றும் உள்ளாடைக்குள் இருந்து, 1.33 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவருக்கு உறுதுணையாக செயல்பட்ட, தமீம் அன்சாரி, 26, சென்னை விமான நிலையத்திற்கு வெளியே கைது செய்யப்பட்டார்.ஷார்ஜாவில் இருந்து, ‘ஏர் அரேபியா’ விமானம், நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு, சென்னை வந்தது. அந்த விமானத்தில் வந்த, ராமநாதபுரம் மற்றும் சென்னையைச் சேர்ந்த, நான்கு பேரிடம் சோதனை நடத்தப்பட்டது.

அவர்கள் அணிந்திருந்த, ‘விக்’குகளில் இருந்து, 2.08 கிலோ தங்கம் சிக்கியது.துபாயில் இருந்து சென்னை வந்த, ‘இண்டிகோ ஏர்லைன்ஸ்’ விமானத்தில், ஒரு இருக்கைக்கு அடியில், துணிப் பையில் இருந்த, 933 கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இவற்றின் மொத்த மதிப்பு, 2.77 கோடி ரூபாய்.வெளிநாட்டு கரன்சிசென்னையில் இருந்து, துபாய் வழியாக, ஷார்ஜா நகருக்கு செல்லும், இரு விமானங்கள், நேற்று அதிகாலை புறப்பட தயாராக இருந்தன.

அந்த விமானங்களில் செல்ல வந்த, ராமநாதபுரம், சென்னை நகரங்களைச் சேர்ந்த, நான்கு பேர் அணிந்திருந்த,’விக்’ குகளில் இருந்து, சவுதி திராம், அமெரிக்கா டாலர் கள் சிக்கின. இந்திய ரூபாய் மதிப்பில், இவற்றின் மதிப்பு, 24 லட்சம் ரூபாய்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here