தங்கம் மற்றும் வெள்ளியின் விலை?!

கேரட் ஆபரணத் தங்கம் ஒரு கிராம் 4192 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. நேற்று மாலை இதன் விலை ரூ. 4233ஆக இருந்தது.

இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 41 குறைந்துள்ளது. அதேபோல, நேற்று மாலை நிலவரப்படி ரூ. 33,864-க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு சவரன் ஆபரணத் தங்கம் இன்று  ரூ. 328 குறைந்து ரூ. 33,536-க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை கோயம்புத்தூர் மற்றும் திருச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் ரூ. 4192 விற்பனை செய்யப்படுகின்றது.

ஒரு கிராம் வெள்ளி நேற்று மாலை நிலவரப்படி ரூ. 69.50 விற்பனை ஆன நிலையில் இன்று கிராமிற்கு ரூ. 1.00 விலை குறைந்து ரூ.68.50க்கு விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை இந்த வாரத்தின் தொடக்க நாளான திங்கள் முதல் தொடர்ந்து ஏற்ற இறக்கத்துடனே இருந்து வருகிறது.

நேற்று மாலை நிலவரப்படி தங்கம் விலை சவரனுக்கு ரூ. 72 உயர்ந்து விற்பனையான நிலையில் இன்று காலை நிலவரப்படி சவரனுக்கு ரூ.328 விலை குறைந்துள்ளது.

இந்நிலையில் கடந்த வாரத்தில் இருந்து தொடர்ந்து தங்கத்தில் விலை குறைந்து வந்ததால் கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை 34,000 குறைவாக விற்பனை செய்யப்பட்டது. தற்போதும் தங்கத்தின் விலை குறைந்து சவரன் ரூ.33,536-க்கு விற்பனையாகிறது.

Iruthi Theerppu: IRUTHI THEERPPU OFFICE 044-35720178