சென்னை:
தங்கம் விலையில் சில நாட்களாகவே ஏற்றத்தாழ்வு காணப்பட்டு வந்தது.
பவுன் ரூ.37 ஆயிரத்துக்குள்ளே இருந்து வருகிறது. நேற்று பவுனுக்கு ரூ.480 குறைந்து ரூ.36 ஆயிரத்து 520-க்கு விற்றது. ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 565 ஆக இருந்தது.
இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை சரிந்தது. சென்னையில் இன்று காலை ஆபரண தங்கத்தின் விலையில் பவுனுக்கு ரூ.192 குறைந்து ரூ.36 ஆயிரத்து 328-க்கு விற்கிறது. கிராமுக்கு ரூ.24 குறைந்து ரூ.4 ஆயிரத்து 541 ஆக உள்ளது.
தங்கத்தை போலவே வெள்ளி விலையும் குறைந்தது. வெள்ளி கிலோவுக்கு ரூ.1700 சரிந்து ரூ.73 ஆயிரத்து 600 ஆக இருக்கிறது. ஒரு கிராம் வெள்ளி ரூ.73.60-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் தங்கத்துக்கான சுங்கவரி குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன்படி சுங்கவரி 12.5 சதவீதத்தில் இருந்து 7.5 சதவீதமாக குறைந்துள்ளது.
இதனால் தங்கம் விலை இன்று 2-வது நாளாக குறைந்துள்ளது. நேற்றும், இன்றும் சேர்ந்து பவுனுக்கு ரூ.672 குறைந்துள்ளது.