திருவனந்தபுரம்:
நாட்டில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வரும் நிலையில், சூழலுக்கு ஏற்ப மாநில அரசுகள் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. தமிழகத்தில் இன்று முதல் புதிய கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்துள்ளன. மளிகை, காய்கறி கடைகள், டீக்கடைகள் மதியம் 12 மணி வரை மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மற்ற கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளன.
இதேபோல் அண்டை மாநிலமான கேரளாவிலும் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் கேரளாவில் வரும் 8-ம் தேதி காலை 6 மணி முதல் 16-ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்துள்ளார்.
கேரளாவில் நேற்று ஒரே நாளில் கிட்டத்தட்ட 42000 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.