3 நகரங்களில் முழு ஊரடங்கு
கொரோனா பரவல் அதிகரிப்பதன் எதிரொலியாக போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில், ஞாயிறு தோறும் முழு ஊரடங்கை மத்திய பிரதேச அரசு அறிவித்துள்ளது.
மத்திய பிரதேசத்தில் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1200 ஐ நெருங்குகிறது. இதைத் தொடர்ந்து, கட்டுப்பாட்டு நடவடிக்கையாக பல நகரங்களில் இரவு நேர ஊரடங்கு ஏற்கனவே அமலில் உள்ளது.
இந்த நிலையில் இந்த 3 முக்கிய நகரங்களிலும், மறு அறிவிப்பு வரும் வரை எல்லா ஞாயிற்றுக் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
போபால், இந்தூர், ஜபல்பூர் ஆகிய 3 நகரங்களில் முழு ஊரடங்கு என்பதால் சாலைகளில் வாகனங்களின்றி வெறிச்சோடி காணப்பட்டன.
மராட்டியத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ளதால், மத்திய பிரதேசத்திலும் கொரோனா கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டு வருகின்றன.