இராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் தாலுகாவில் முத்தமிழ் அறக்கட்டளை பல்வேறு பொதுநல சேவைகளை செய்து வருகிறது ,நேற்று மகளிருக்கான இலவச தையல் பயிற்சி அறக்கட்டளை சார்பில் தொடங்கப்பட்டது.
முதுகுளத்தூர் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் ஏராளமான படித்த மற்றும் படிக்காத மகளிர்கள் உள்ளனர் .இவர்களுக்கான வேலை வாய்ப்பு இங்கு இல்லை .அதனால் வேலைவாய்ப்பற்ற மகளிர்க்கு சுயதொழில் பயிற்சி தொடங்க முத்தமிழ் அறக்கட்டளை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டது ,அதன் படி ஒருவாரத்திற்கு முன்பு அனைவருக்கும் தகவல் ஒலிபெருக்கி மூலம் தெரிவிக்கப்பட்டு முன்பதிவு செய்யுமாறும் அறிவுறுத்தப்பட்டது.
பிறகு ஏராளமான பெண்கள் முன்பதிவு செய்தனர். நேற்று(16/12/2022) விழாவானது மதியம் 3.00 அளவில் தொடங்கப்பட்டது ,இவ்விழாவில் 100 க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டனர்.சிறப்பு விருந்தினர்களாக முதுகுளத்தூர் காவல் ஆய்வாளர் இளவரசு,நேருயுவகேந்திரா இயக்குனர் பிரவீன்குமார்,மருத்துவர் பன்னீர்செல்வம்,கிராம நிர்வாக அலுவலர் ரமேஷ் ,திருமுருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்,அனைவரும் தையல் பயிற்சியின் பயன்பாடுகளை பற்றி எடுத்து கூறினார்கள்.
இவ்விழாவில் வரவேற்புரை மற்றும் நன்றி உரையை முத்தமிழ் அறக்கட்டளை நிறுவனர் சபரிமலைநாதன் கூறினார் மற்றும் அறக்கட்டளை உறுப்பினர்கள் சுரேஷ்க்கண்ணன்,செந்தில்வேலவன் ,நாகராஜ் கண்ணன் ,முனியசாமி ஆகியோரும் உடன் இருந்தனர்.