சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பள்ளிவாசலில் காரைக்குடி காஸ்மோபாலிட்டன் லயன் சங்கம், அக்னி சிறகுகள் மக்கள் நலச் சங்கம் ,வள்ளல் அழகப்பர் இளையோர் சங்கம் மற்றும் செஞ்சை ஜமாத் இணைந்து நடத்தும் இலவச கண் பரிசோதனை முகாம் நடைபெற்றது.
மருத்துவர் ஆனந்த பிரியா தலைமையில் மருத்துவகுழுவினர் 210 பொதுமக்களுக்கு கண் பரிசோதனை செய்து 21 நபர்களுக்கு இலவச கண் புரை செய்ய அழைத்துச் சென்றார்கள்.