தூத்துக்குடி, திருநெல்வேலி, சென்னை ஆகிய மாவட்டங்களை சேர்ந்தவர்களிடம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 1 ¼ கோடிக்கு மேல் பணம் மோசடி செய்த தூத்துக்குடி மாவட்டம் புதூர் அரசு மாணவர் விடுதி காப்பாளர் கைது – மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் நடவடிக்கை.
 
தென்காசி மாவட்டம், சின்ன வாகைக்குளம் பகுதியை சேர்ந்த பால்சாமி மகன் அலெக்சாண்டர் (37)  தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் புதூரில் உள்ள ஆதி திராவிடர் அரசு மாணவர் விடுதியில் காப்பாளராக பணிபுரிந்து வருகிறார். இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் அந்தியூர் பகுதியை சேர்ந்த விஜயன் மகன் அன்பு (31) மற்றும் அவரது நண்பரான வினோத் ஆகிய இருவரிடமும் அறிமுகமாகி  அரசு வேலை வாங்கி தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி நம்பிக்கை ஏற்படுத்தி அவர்களிடமிருந்து மொத்தம் ரூபாய் 11,28,500/- பணத்தை பெற்று கொண்டு மோசடி செய்துள்ளார். இதுகுறித்து மேற்படி அன்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகாரளித்துள்ளார்.
 
புகாரின் அடிப்படையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர்  பாலாஜி சரவணன்  மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் . ஜெயராம்க்கு உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.
 
அவரது உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் மேற்பார்வையில் மாவட்ட குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர்  அந்தோணியம்மாள் தலைமையில் உதவி ஆய்வாளர் . நிவேதா, சிறப்பு உதவி ஆய்வாளர்கள்  சண்முகசுந்தரம் மற்றும்  மோகன்ஜோதி ஆகியோர்  அலெக்ஸாண்டரை விளாத்திகுளம் புதூரில் வைத்து கைது செய்து பேரூரணி சிறையிலடைத்தனர்.
 
மேலும் அலெக்ஸாண்டர் தூத்துக்குடி, திருநெல்வேலி சென்னை ஆகிய மாவட்டங்களில் சுமார் 20க்கும் மேற்பட்ட நபர்களிடமிருந்து அரசு வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தைகள் கூறி ரூபாய் 1,26,68,500/- வரை பணம் பெற்று கொண்டு மோசடி செய்தது விசாரணையில் தெரியவந்துள்ளது குறிப்பிடதக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here