விவசாயிகள் தொடர் போராட்டம்: விரைந்த மூவர் குழு!
புதுடில்லி :
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள் குறித்து, தனியார் விவசாய மண்டி நிர்வாகிகள், உணவு பூங்கா நிர்வாகிகள், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் ஆகியோருடன், உச்ச நீதிமன்றம் நியமித்துள்ள மூவர் குழு, ஆலோசனை நடத்தியது.
மத்திய அரசு நிறைவேற்றியுள்ள வேளாண் சட்டங்களை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த சட்டங்களை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்த உச்ச நீதிமன்றம், சட்டங்கள் பற்றி விவசாயிகள் உட்பட பல தரப்பினருடனும் ஆலோசித்து அறிக்கை தாக்கல் செய்ய, மூன்று பேர் அடங்கிய நிபுணர் குழுவை நியமித்தது.
இந்தக்குழு, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுடன், ஆன்லைன் மற்றும் நேரில் ஆலோசனை நடத்தி வருகிறது.
இந்நிலையில், மாநில விற்பனை வாரியங்களின் தலைவர்கள், தனியார் மண்டி நிர்வாகிகள், உணவு பூங்கா நிர்வாகிகள் ஆகியோருடன், உச்ச நீதிமன்ற குழு, நேற்று ஆலோசனை நடத்தியது.
இதில், குஜராத், ஹரியானா, கர்நாடகா, கேரளா, மத்திய பிரதேசம், மஹாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.