கோவா அணி 2-வது வெற்றி: இன்று விறுவிறுப்பான ஆட்டம்! 
 
கோவா:
 
11 அணிகள் இடையிலான 7-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கோவாவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு நடந்த 25-வது லீக் ஆட்டத்தில் ஒடிசா எப்.சி.-எப்.சி.கோவா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் கோவா அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தியது.
 
கோவா வீரர் இகோர் அன்குலோ 45-வது நிமிடத்தில் வெற்றிக்கான கோலை அடித்தார். பதில் கோல் திருப்ப ஒடிசா அணி எடுத்த முயற்சிக்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. 5-வது ஆட்டத்தில் ஆடிய கோவா அணி பெற்ற 2-வது வெற்றி இதுவாகும். 5-வது ஆட்டத்தில் களம் கண்ட ஒடிசா அணிக்கு இது 4-வது தோல்வியாகும்.
 
இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறும் லீக் ஆட்டங்களில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் எப்.சி.(கவுகாத்தி)-சென்னையின் எப்.சி. (மாலை 5 மணி), பெங்களூரு எப்.சி.-கேரளா பிளாஸ்டர்ஸ் எப்.சி. (இரவு 7.30 மணி) அணிகள் சந்திக்கின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here