சென்னை:
காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி அவர்களின் இந்திய ஒற்றுமை நடை பயணத்தின் அடையாளமாக கொடியேற்றும் நிகழ்ச்சி நேற்று மாவட்டம் முழுவதும் வடசென்னை மேற்கு மாவட்டத் தலைவரும், மாமன்ற உறுப்பினருமான திரு. ஜெ. டில்லிபாபு தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சிகளில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திரு. K.S Alagiri அவர்கள் கொடியேற்றி சிறப்புரையாற்றினார். தொடக்க நிகழ்ச்சி கொடுங்கையூர் மின்சார வாரியம், காமராஜர் சிலை அருகில் நடைபெற்றது. பின்னர் நலிந்தோருக்கு அன்னதானம் நடைபெற்றது.
இந்நிகழ்வில் வேளச்சேரி சட்டமன்ற உறுப்பினர் திரு. JM அசன் மெளலானா மற்றும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் கலந்துகொண்டனர்.