இராமநாதபுரம்:
இராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி பகுதி உரக்கடைகளில் கூடுதல் விலைக்கு உரங்கள் விற்பதாக விவசாயிகள் புகார் தெரிவித்தனர்.கடந்த ஆண்டை விட நடப்பு ஆண்டில் யூரியா மூடை அதிக விலை கொடுத்து வாங்குவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர். தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்களில் விவசாய நிலங்களுக்கு ஏற்ப யூரியா மூடைகள் குடோவுன்களில் வைத்து அடுக்கப்படுகிறது.
ஆனால், அவை முறைகேடாக 70 சதவீதம் மாயமாகி விடுகிறது. 30 சதவீதம் மட்டுமே விவசாயிகளுக்கு கிடைக்கிறது. செயற்கையான முறையில் உரத்தட்டுப்பாட்டை உருவாக்குவதால் விவசாயிகள் வேறு வழியின்றி தனியார் உரக்கடையை நாடும் நிலை மற்றும் கூடுதல் விலைக்கு விற்பனை செய்யும் போக்கு குறித்து விளக்கப்பட்டது. பெருநாழியில் உள்ள இரு தனியார் உரக்கடையில் ஆய்வு செய்த கமுதி வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி இருப்பு பதிவேடு மற்றும் உரமூடைகளை ஆய்வு செய்தார்.உரமூடைகளை ஆய்வு செய்தார். விவசாயிகளிடம் குறை, நிறைகளை கேட்டறிந்தார்.
வேளாண்மை உதவி இயக்குனர் சிவராணி கூறியதாவது:
அரசு நிர்ணயித்துள்ள விலையை காட்டிலும் கூடுதலாக யூரியா மூடைகளை விற்கும் கடைகள் ஆய்வு செய்யப்பட்டு, தவறு நடப்பது கண்டறியப்பட்டால், உரிமையாளர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய காலங்களில் உரிய நேரத்தில் தட்டுப்பாடு இல்லாமல் யூரியா உள்ளிட்ட உரங்கள் கிடைப்பதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளது என்றார்