தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான். இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. இவர் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உட்பட பல படங்களில் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ‘மறக்குமா நெஞ்சம்’ என்ற இசை நிகழ்ச்சியை கடந்த ஆகஸ்ட் 12ம் தேதி நடத்த திட்டமிட்டது. ஆனால், மழை காரணமாக இந்த இசை நிகழ்ச்சி நடத்தப்படவில்லை.
 

இதனையடுத்து, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள ஆதித்யா ராம் பேலஸில் இந்த நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த ஆகஸ்ட் மாதம் நடத்தவிருந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் வாங்கிய டிக்கெட் செல்லுபடியாகும் என்று அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து, நேற்று ‘மறக்குமா நெஞ்சம்’ இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் படையெடுத்து வந்தனர்.
 

ஆனால், வந்தவர்களுக்கு வேதனையும், வெறுப்பும், குமுறலும் தான் மிஞ்சியது. இந்நிகழ்ச்சிக்கு மொத்த பொறுப்பையும் ஏசிடிசி தனியார் நிறுவனம் ஏற்றது. ஆனால், டிக்கெட்டுக்கள் அதிகமாக விநியோகம் செய்ததால், 50 ஆயிரம் விலை கொடுத்து டிக்கெட் வாங்கியவர்கள் சீட்டில் சாதாரண டிக்கெட் வாங்கியவர்கள் இருந்ததாகவும், நிகழ்ச்சியில் ஏற்பாடுகள் எதுவும் சரியில்லையென்றும், தண்ணீர், கார் பார்க்கிங் எதுவும் கிடையாது என்றும் ரசிகர்கள் ரொம்ப சிரமப்பட்டுள்ளனர்.

இவ்வளவு அதிகமாக பணம் கொடுத்து வாங்கியும் எங்களை ஏமாற்றிவிட்டார்கள் என்று மனக் குமுறல்களுடன் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் நிகழ்ச்சியை விட்டு பாதியிலேயே வெளியேறினர்.

இந்நிலையில் ஏ.ஆர்.ரகுமான் மீது ரசிகர்கள் கடும் கோபத்தில் இருக்கின்றனர். உன்னை நம்பி வந்தோம் பாரு….. என வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இனி ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் ஆர்வம் காட்டுவார்களா? என்பது சந்தேகம் தான்.

எமது நிருபர்: S. கோபி 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here