கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில் வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வந்த நிலையில் தற்போது புதிய கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது.
அதன்படி, வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் தீவர கண்காணிப்பு பிறகே அனுப்பி வைக்கப்படுவார்கள் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. ஆட்டோக்களில் ஓட்டுநர் தவிர்த்து 2 பேருக்கு மட்டுமே அனுமதி. திருமண விழாவில் அதிகபட்சமாக 100 பேர் மற்றும் இறுதி சடங்குகளில் 50 பேருக்கு மட்டுமே பங்கேற்க அனுமதி.
பூங்காவில் 50 சதவீதம் பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும். மால்கள், பெரிய வணிக வாளகங்களில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி . திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்று பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
கோயம்பேடு வணிக வளாகத்தில் செயல்படும் சில்லரை வியபார காய்கனி அங்காடிகள் மட்டும் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது. அதே போன்று மாவட்டங்களில் உள்ள மொத்த வியபார காய்கனி வளாகங்களில் சில்லரை வியபார கடைகளுக்கு தடை.
மாவட்டங்களுக்கு இடையேயான அரசு மற்றும் தனியார் பேருந்தும் மற்றும் சென்னையில் இயக்கப்படும் மாநகரப் பேருந்துகளில் உள்ள இருக்கைகளில் மட்டும் பயணிகளம் அமர்ந்து பயணிக்க அனுமதி. பேருந்துகளில் நின்று பயணம் செய்ய அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது.