திரையரங்குகள் 50 சதவீத பார்வையாளர்களுடன் செயல்படலாம் என அரசு அறிவித்த பிறகும் பல திரையரங்குகள் இன்னும் மூடியே கிடக்கின்றன. திறந்த பல திரையரங்குகள் காட்சிகளை ரத்து செய்துள்ளன. ஷாங் 0 சி, எப் 9 போன்ற ஹாலிவுட் பிரமாண்ட படங்கள் திரையரங்குகளில் ஓடினாலும், புதிய தமிழ்ப் படங்கள் முழுமையாக வெளியாகாமல் இருப்பதே இதற்கு காரணம். இந்த வாரம் விஜய் சேதுபதியின் லாபம் வெளியாக இருக்கும் நிலையில், எந்தெந்த படங்கள் வரும் நாள்களில் வெளியாக உள்ளன என பார்க்கலாம்.
செப்டம்பர் 9 – லாபம்: விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடிப்பில் எஸ்.பி.ஜனநாதன் இயக்கியிருக்கும் லாபம் செப்டம்பர் 9 வெளியாகிறது. கொரோனா இரண்டாம் அலை ஊரடங்குக்குப் பின் திரையரங்கில் வெளியாகும் முதல் முன்னணி நடிகரின் படம் இது.
செப்டம்பர் 10 – தலைவி: ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறை சொல்லும் படம். ஏ.எல்.விஜய் கங்கனாவையும், அரவிந்த்சாமியையும் வைத்து எடுத்துள்ளார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, இந்தி உள்பட பல மொழிகளில் தலைவி வெளியாகிறது.
செப்டம்பர் 17 – கோடியில் ஒருவன்: ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ஆக்ஷன் படம் இது. ஆத்மிகா நாயகி. விஜய் ஆண்டனிக்கு என்று தனி ரசிகர்கள் வட்டம் உள்ளது. அவர்களை படம் திரையரங்குகளுக்கு அழைத்து வரும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.
இடியட்: தில்லுக்கு துட்டு ராம்பாலா இயக்கத்தில் சதீஷ், நிக்கி கல்ராணி, ஆனந்த் ராஜ், மயில்சாமி உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் ஹாரர் காமெடி திரைப்படம்.
ப்ரெண்ட்ஷிப்: கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்க,அர்ஜுன், சதீஷ், லாஸ்லியா உள்ளிட்டவர்கள் நடித்திருக்கும் ரொமான்டிக் காமெடி திரைப்படம்.
செப்டம்பர் 24 – பிளான் பண்ணி பண்ணணும்: பத்ரி வெங்கடேஷ் இயக்கத்தில் தயாராகியிருக்கும் ரொமான்டிக் காமெடித் திரைப்படம் பிளான் பண்ணி பண்ணணும். ரியோ ராஜ், ரம்யா நம்பீஸன் நடித்துள்ளனர். யுவன் இசை. செப்டம்பர் 24 படம் திரைக்கு வருகிறது.
செப்டம்பர் 20 – சிவகுமாரின் சபதம்: சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் ஹிப் ஹாப் தமிழா கதை, திரைக்கதை,வசனம், எழுதி இயக்கி, இசையமைத்து, நடிக்கும் படம். செப்டம்பர் 30 படம் திரைக்கு வருகிறது.
அக்டோபர் 01 – ருத்ர தாண்டவம் ரிச்சர்ட் நடிப்பில் மோகன் ஜி இயக்கியிருக்கும் மதமாற்றத்தை குறித்த இந்தப் படத்தில் கௌதமும் நடித்துள்ளார். அக்டோபர் 1 திரைக்கு வருகிறது.
அக்டோபர் 14 – எனிமி: விஷால், ஆர்யா நடிப்பில் ஆனந்த் சங்கர் இயக்கியிருக்கும் இந்த ஆக்ஷன் படம் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் 14 வெளியாகிறது.
அரண்மனை 3: இதிலும் ஆர்யாதான் நாயகன். சுந்தர் சி. உள்பட ஒரு நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. முதலிரு பாகங்கள் வழியாக அரண்மனை கதைக்களம் ரசிகர்களுக்கு தெரியும் என்பதால் அதிகளவில் ரசிகர்கள் திரையரங்குகளுக்குவர வாய்ப்புள்ளது.
இவை இன்றைய தேதியில் திரையங்கில் வெளியாக இருக்கும் படங்களின் பட்டியல். இதில் சில படங்கள் தங்கள் வெளியீட்டு தேதியை மாற்றிக் கொள்ளவும், புதிதாக சில படங்கள் உள்ளே வரவும் வாய்ப்புள்ளது.