2020 பிஎம்டபிள்யூ ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மோட்டார்சைக்கிள்கள் வெளியீட்டிற்கு முன் இவை மாத தவணையில் கிடைக்கும் என பிஎம்டபிள்யூ தெரிவித்துள்ளது.
இரு மாடல்களுக்கான கடன் ஒப்புதல் வழிமுறைகள் இந்தியா முழுக்க அனைத்து பிஎம்டபிள்யூ விற்பனையகம் மற்றும் வலைதளங்களில் துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த சலுகையின் கீழ் பிஎம்டபிள்யூ மாடல்கள் ரூ. 4500 மாத தவணையில் வழங்கப்படுகிறது.
பிஎம்டபிள்யூ 2020 ஜி 310 ஆர் மற்றும் ஜி 310 ஜிஎஸ் பிஎஸ்6 மாடல்களின் விலை வெளியீட்டின் போது அறிவிக்கப்பட இருக்கிறது. இதுவரை வெளியாகி இருக்கும் தகவல்களில் புதிய மாடல்களின் விலை தற்போதைய பிஎஸ்4 மாடல்களின் விலையை விட குறைவாக நிர்ணயம் செய்யப்படலாம்.
புதிய மாடல்களில் மேம்பட்ட ஹெட்லேம்ப் யூனிட் வழங்கப்படுகிறது. இவற்றில் பிஎஸ்6 ரக 313சிசி சிங்கில் சிலிண்டர் மோட்டார் வழங்கப்படுகிறது. இதன் செயல்திறன் தற்போதைய பிஎஸ்4 மாடல்களை விட வேறுபடும் என கூறப்படுகிறது.