……………………..நமது நிருபர்………………. 

2021 தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 6-ம் தேதி முடிவடைந்தது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதிலிருந்து வாக்குப்பதிவு நாள் வரை தமிழக முழுவதும் ஆவணங்களின்றி கொண்டுவரப்பட்ட பணம், பொருள்களைப் பறிமுதல் செய்து வந்தது தேர்தல் ஆணையம்.

ரொக்கமாக ரூ.236.70 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது. அதேபோல 2,90,284.13 லிட்டர் மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மொத்த மதிப்பு 5.27 கோடி ரூபாய் எனக் கணிக்கிடப்பட்டிருக்கிறது. 2.20 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா, புகையிலை உள்ளிட்ட போதைப் பொருள்கள் கைப்பற்றப்பட்டிருக்கின்றன.

8.15 சென்ட் வைரங்கள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மதிப்பு நான்கு லட்சம் ரூபாய். 5,22,318.72 கிராம் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. இதன் மொத்த மதிப்பு 173.19 கோடி ரூபாய் எனக் கணக்கிடப்பட்டிருக்கிறது.

731.03 கிலோ எடை கொண்ட வெள்ளிப் பொருள்களும் கைப்பற்றப்பட்டிருக்கின்றன. வெள்ளிப் பொருள்களின் மொத்த மதிப்பு 3.17 கோடி ரூபாய். ரூ. 1.95 கோடி மதிப்பிலான சேலை உள்ளிட்ட துணிமணிகள் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன.

23.14 கோடி ரூபாய் மதிப்பிலான லேப்டாப், குக்கர், குடம் உள்ளிட்ட மற்ற பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டிருக்கின்றன. 55 லட்சம் மதிப்பிலான வெளிநாட்டுப் பணமும் கைப்பற்றப்பட்டிருக்கிறது.

பணம், நகை, மதுபானங்கள், பொருள்கள் எனத் தேர்தல் ஆணையத்தால் பறிமுதல் செய்யப்பட்டவற்றின் பெருமொத்த மதிப்பு ரூ. 446.28 கோடி எனக் குறிப்பிடப்பட்டிருக்கிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here