தனி நபர்கள், நிறுவனங்கள் தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக நிதி வழங்கும் வகையில் தேர்தல் பத்திரங்கள் திட்டம் கொண்டுவரப்பட்டது.
எஸ்.பி.ஐ. வங்கி மூலம் இந்த தேர்தல் பத்திரங்கள் விற்கப்பட்டு வந்தன. ஒவ்வொரு அரசியல் கட்சியும் கார்ப்பரேட் நிறுவனங்களிடமிருந்து தேர்தல் பத்திரங்கள் மூலமாக பெருமளவு நன்கொடையை பெற்று குவித்தன.
தேர்தல் பத்திரங்கள் மூலம் அதிக நிதி பெற்ற அரசியல் கட்சிகளின் விவரம்:-
பா.ஜ.க. – ரூ. 6 ஆயிரத்து 986 கோடி
திரிணாமுல் காங்கிரஸ் – ரூ. 1 ஆயிரத்து 397 கோடி
காங்கிரஸ் – ரூ. 1 ஆயிரத்து 334 கோடி
பாரதிய ராஷ்டிரிய சமிதி – ரூ. 1 ஆயிரத்து 322 கோடி
பிஜு ஜனதா தளம் – ரூ. 944 கோடி
தி.மு.க. – ரூ. 656 கோடி
ஓய்.எஸ்.ஆர். காங்கிரஸ் – ரூ. 442 கோடி
தெலுங்கு தேசம் – ரூ. 181 கோடி
மதச்சார்பற்ற ஜனதா தளம் – ரூ. 89 கோடி
சிவசேனா – ரூ. 60 கோடி
ராஷ்டிரிய ஜனதா தளம் – ரூ. 56 கோடி
சமாஜ்வாதி – ரூ. 14 கோடி
சிரோமணி அகாலி தளம் – ரூ. 7 கோடி
அ.தி.மு.க. – ரூ. 6 கோடி
தேசிய மாநாட்டு கட்சி – ரூ. 50 லட்சம்
தேர்தல் பத்திரங்கள் மூலம் எந்தவித நிதியும் பெறவில்லை என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தெரிவித்துள்ளது.