தமிழக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, உயர்கல்வித்துறை அமைச்சர் க.பொன்முடி ஆகியோர் நேற்று விழுப்புரம் மகாராஜபுரம் பகுதியில் கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின்கீழ் ரூ.1 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் நவீன எரிவாயு தகன மேடை பணிகளை பார்வையிட்டனர். அப்போது பணியை விரைந்து முடிக்குமாறு அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

அதனை தொடர்ந்து கீழ்ப்பெரும்பாக்கத்தில் ரூ.2½ கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை பார்வையிட்டனர். அதன் பிறகு விழுப்புரம் நகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின்கீழ் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணி, விழுப்புரம் பாண்டியன் நகரில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் உந்து நிலைய பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதனை தொடர்ந்து கீழ்ப்பெரும்பாக்கத்தில் ரூ.2½ கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள நூலகம் மற்றும் அறிவுசார் மையத்தை பார்வையிட்டனர்.

அதன் பிறகு விழுப்புரம் நகராட்சியில் தேசிய நகர்ப்புற சுகாதார இயக்கத்தின்கீழ் ரூ.1 கோடியே 20 லட்சம் மதிப்பில் புதிய நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம் கட்டுமான பணி, விழுப்புரம் பாண்டியன் நகரில் அமைக்கப்பட்டு வரும் கழிவுநீர் உந்து நிலைய பணி உள்ளிட்ட பல்வேறு பணிகளை அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். அதன் பின்னர் அமைச்சர் கே.என்.நேரு, நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:- பாதாள சாக்கடை பணிகள் தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், நாளைய தினம் (இன்று) விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகைதந்து விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ள உள்ளார். அதனடிப்படையில் பணிகளின் தன்மை குறித்து தற்போது ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. விழுப்புரம் நகராட்சியில் பாதாள சாக்கடை திட்டப்பணிகள் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் முடிக்கப்படும். விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளிலும் பணிகள் விரைவாக நடந்து வருகிறது. ஏற்கனவே பாதாள சாக்கடை இல்லாத பகுதிக்கும் அத்திட்டம் கொண்டு வர நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அப்பணிகளும் விரைந்து தொடங்கி முடிக்கப்படும். எல்லா பணிகளையும் மக்களின் நன்மை கருதி செய்து வருகிறோம். சாலை பணி, கட்டிட பணிகளை மேற்கொள்வது போன்று பாதாள சாக்கடை திட்டப்பணிகள், குடிநீர் திட்டப்பணிகளை எளிதாக மேற்கொள்ள ஒப்பந்ததாரர்கள் கிடைப்பதில்லை, இருக்கின்ற ஒப்பந்ததாரர்களை வைத்துதான் அந்த பணிகளை செய்ய வேண்டியிருக்கிறது.

மாநகராட்சியாக விழுப்புரம் நகராட்சியை மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கு 6 லட்சம் மக்கள் தொகை தேவை, இருந்தால் உடனே ஆக்கிவிடலாம். இதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லை. இதற்கு அருகில் இருக்கிற கிராமங்களை இணைக்க வேண்டும். முதல்-அமைச்சரின் அனுமதி பெற்று மாநகராட்சியாக தரம் உயர்த்துவதற்கான முயற்சிகள் விரைவில் எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். இந்த ஆய்வின்போது நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா, மாவட்ட கலெக்டர் சி.பழனி, நா.புகழேந்தி எம்.எல்.ஏ., மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயச்சந்திரன், விழுப்புரம் நகரமன்ற தலைவர் தமிழ்ச்செல்வி, துணைத்தலைவர் சித்திக்அலி, நகராட்சி ஆணையர் சுரேந்திரஷா உள்பட பலர் உடனிருந்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here