காரைக்குடி மகர நோன்பு திடல் அருகே உள்ள அரசு உதவி பெறும் பள்ளிக்கு பெற்றோர்கள் சார்பில் கல்வி சீர் வழங்கும் விழா நடந்தது. காரைக்குடி மகரம் நோன்பு திடலில் ஸ்ரீ கார்த்திகேயன் உதவி பெறும் துவக்கப்பள்ளி உள்ளது. இதில் 250 மாணவர்கள் படித்து வருகின்றனர். இப்பள்ளியில் நேற்று கல்வி சீர் வழங்கும் விழா நடந்தது.

கல்வி சீர் வழங்கும் விழாவில் பள்ளியின் தலைமை ஆசிரியை சுவேதா வரவேற்றார்.பெற்றோர் ஆசிரியர் சங்கத் துணைத் தலைவி ஜீவதா தலைமையில் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் விநாயக கோயிலில் இருந்து கல்வி சீர் வரிசைகளை பள்ளியை வரையில் மேளதாளங்களுடன் ஊர்வலம் எடுத்து வந்தனர்.

சீர்வரிசையில் குழந்தைகள் விளையாடுவதற்கான தேவையான 15 கேரம் போர்டு 15 செஸ் போர்டு 20 செட் பல்லாங்குழி 20 காய கட்டை உள்ளிட்ட பல்வேறு விளையாட்டுப் பொருட்கள் மற்றும் கல்வி உபகரணங்கள் கல்வி சீராக வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here