பிரமாண்ட சிறுகோள்: பூமிக்கு ஆபத்தா?
2021 மார்ச் 21 ஞாயிற்றுக்கிழமை இரவு 9:00 மணிக்கு (இந்திய நேரப்படி) பூமியில் இருந்து ஒரு பெரிய சிறுகோள் கடக்கபோகிறது. 2001 FO32 என அழைக்கப்படும்.
இந்த விண்வெளி பாறை கிட்டத்தட்ட அரை கிலோமீட்ட்டர் அகலமானது. சுமார் 440 மீட்டர் முதல் 680 மீட்டர் வரை அகலம் கொண்டது. இது ஒரு மணி நேரத்திற்கு 123,876 கிலோமீட்டர் வேகத்தில், ஒரு சராசரி சிறுகோளை விட வேகமாக பறக்கும் என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
மேலும் 2001 FO32 சிறுகோள் பூமியில் இருந்து 2 மில்லியன் கிலோமீட்டர் தூரத்தில் பயணிப்பதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். இது குறித்து நாசாவின் கருத்துப்படி இந்த சிறுகோள் நமது கிரகத்திற்கு எந்த அச்சுறுத்தலையும் ஏற்படுத்தாது.
ஆனாலும் இது நாசாவின் சிறுகோள் கண்காணிப்பு பட்டியலில் வைக்க போதுமானதாகவுள்ளது மற்றும் ஒரு அபாயகரமான சிறுகோள் என்று பெயரிடப்பட்டுள்ளது.
பெரிய சிறுகோள், பெரிய அச்சுறுத்தல் தான். ஆனால் பூமியின் ஈர்ப்பு விசையால் இழுக்கப்படும் அளவுக்கு அது நெருங்காத வரை ஆபத்தில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.