சுக்கைத் தூள் செய்து, எலுமிச்சை சாறுடன் கலந்து குடித்தால் பித்தம் விலகும்.

சிறிது சுக்குடன், ஒரு வெற்றிலையை மென்று தின்றால், வாயுத்தொல்லை நீங்கும்.

சுக்கு, மிளகு, தனியா, திப்பிலி, சித்தரத்தை இவை அனைத்தையும் இட்டு கஷாயம் செய்து பருகிவர, கடுஞ்சளி மூன்றே நாட்களில் குணமாகும். இழைத்துப் பற்று போட தலைவலி நீங்கும்.

சுக்கு சிறு துண்டு வாயில் இட்டு மென்று அடக்கி வைக்க பல்வலி தீரும்.

சுக்கை நசுக்கி ஒரு துணியில் சிறு மூட்டை கட்டி காதில் வைத்திருக்க காதடைப்பு, நீரடைப்பு தீரும்.

சுக்கப்பொடி வெந்நீரில் கலந்து குடிக்க அஜீரணம் நீங்கும். உஷ்ண பேதி, சீதபேதி, வாந்தி கட்டுப்படுத்தும்.

மார்பு எரிச்சல், வயிற்றுவலி, நெஞ்சுவலி, புளியேப்பம் இவற்றைப் போக்கும்.

வயிற்றுப்பொருமல், வயிற்றிரைச்சல், வயிற்றுப்பச நோயைத் தீர்க்கும். சளி, இருமலைப் போக்கும்.

வாத நோய்களை கட்டுப்படுத்தும். குதம், ஆசனவாய் கடுப்பு எரிச்சல் முதலியவற்றைப் போக்கும்.

ஆஸ்துமா, சைனஸ் நோய்களை கட்டுப்படுத்தும். இதய நோய்கள் மற்றும் காய்ச்சலை கட்டுப்படுத்தும்.

உடலில் ஏற்படும் வீக்கம், கட்டி இவைகளை குணப்படுத்தும்.

நரம்புகள் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு சிறந்த மருந்தாகும்.

சுக்குத்தைலம் தலைக்குத் தேய்த்து குளிக்க ஒற்றைத்தலைவலி, தலைவலி, சைனஸ், காது வலி இவைகள் தீரும்.

சுக்கோடு சிறிது வெந்தயம் சேர்த்துப் பொடியாக்கி, தேனில் கலந்து சாப்பிட்டால், அலர்ஜி தொல்லை அகலும்.

தினமும் ஒரு வகையில் சுக்கை நாம் உட்கொள்ள நோய்கள் வராமலும், வந்த நோய்கள் நீங்கவும் பேருதவியாக இருக்கும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here