தமிழ்நாட்டில் வாகனம் ஓட்டுபவர்கள் மது அருந்தியிருந்தால் அவரோடு பயணிப்பவருக்கும் அபராதம் விதிக்கப்படும் என்ற புதிய விதி இன்று முதல் அமல்படுத்தப்படவுள்ளது.
ஹெல்மெட் இல்லையென்றால் அபராதம்:
சாலைப் போக்குவரத்தின் போது விபத்துகளை தடுப்பதற்காக போக்குவரத்துறை சார்பில் பல்வேறு விதிமுறைகள் பிறப்பிக்கப்பட்டு வருகிறது. சமீபத்தில் இருசக்கர வாகனங்களில் ஓட்டுநர் மற்றும் பின்னால் அமர்ந்திருப்பவர் என இருவருமே ஹெல்மெட் அணிய வேண்டும் இல்லையெனில் அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டிருந்தது.
பயணித்தால் அபராதம்:
இந்த நிலையில், தற்போது மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுடன் பயணிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனம், கார், ஆட்டோ போன்றவற்றில் மது அருந்திருப்பவருடன் பயணம் செய்பவர்களுக்கும் இனி அபராதம் விதிக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.
ஆட்டோவுக்கும் பொருந்தும்:
குறிப்பாக ஆட்டோவில் ஓட்டுநர் மது அருந்தியிருக்கிறார் என்றால் அவரது ஆட்டோவில் பயணிப்பவர்களுக்கும் அபராதம் விதிக்கப்படும். ஆனால் அந்த ஆட்டோ ஓட்டுநர் முன்பின் தெரியாதவராக இருந்தால் அபராதத்தில் இருந்து விலக்கு அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரூ.1,000 – ரூ.10,000:
அவ்வாறு மது அருந்தியிருப்பவர்களுடன் பயணம் செய்பவர்களுக்கு ரூ.1,000 முதல் ரூ.10,000 வரை அபராதம் வசூலிக்க வாய்ப்புள்ளதாகவும், இன்று இரவு முதல் இந்த விதிமுறை நடைமுறைக்கு கொண்டு வரப்படுவதாகவும் கூறப்பட்டுள்ளது.