மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்திய கவுன்சிலின் நிதி ஆதரவோடு மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் ஒருங்கிணைப்போடு நாடு முழுவதும் தேசிய அளவில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வு, இந்தியாவில் நீரிழிவு நிலை இருப்பது அறியப்பட்டுள்ளவர்களில் மூன்றில் ஒரு பங்கு நபர்களே நீரிழிவு மீது சிறப்பான கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர் என கண்டறிந்துள்ளது. இவர்களுள் பாதிக்கும் குறைவான நபர்கள் மட்டுமே இரத்த அழுத்தம் மற்றும் எல்டிஎல் (கெட்ட) கொழுப்பு ஆகியவற்றின் மீது நல்ல கட்டுப்பாட்டைக் கொண்டிருப்பதாகவும் மற்றும் 7.7% நபர்கள் மட்டுமே இந்த மூன்று இலக்கு அளவுகளையும் பூர்த்தி செய்பவர்களாக இருக்கின்றனர். இந்தியாவின் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 113,043 நபர்களை கொண்ட மிகப்பெரிய மாதிரி அளவை உள்ளடக்கியதாக இருந்த இந்த ஆய்வு, நாடு முழுவதிலுமிருந்து பங்கேற்பாளர்களைக் கொண்டிருக்கும் முதல் விரிவான நோய்த்தொற்று மீதான ஆய்வு என்ற பெருமையைப் பெறுகிறது. இந்த ஆய்வின் முடிவுகள் தி லேண்செட் டயாபடீஸ் அண்டு எண்டோகிரனாலஜி என்ற மருத்துவ அறிவியல் இதழில் பிரசுரிக்கப்பட்டிருக்கிறது.
இந்நாட்டின் 30 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 20 வயதிற்கு மேற்பட்ட நபர்கள், பல்வேறு நிலைகளையும் கொண்ட மாதிரி வடிவமைப்பு முறையைப் பயன்படுத்திய இந்த ஆய்வில் உட்படுத்தப்பட்டனர். இவர்களுள் 33,537 நபர்கள் நகர்ப்புறங்களைச் சேர்ந்தவர்களாகவும் மற்றும் 79,506 நபர்கள் கிராமப்புற பகுதிகளில் வசிப்பவர்களாகவும் இருந்திருக்கின்றனர். தேசிய அளவில் பிரதிநிதித்துவ மாதிரியாக, நீரிழிவு இருப்பது உறுதி செய்யப்பட்ட 5789 நபர்களின் அடிப்படையில் இந்தியா முழுமைக்கும் நீரிழிவு கட்டுப்பாடு நிலையைக் குறித்த மதிப்பீடுகளை முதன்முறையாக இந்த ஆய்வு வெளிப்படுத்தியிருக்கிறது.
இந்த ஆய்வு வெளிப்படுத்தும் அம்சங்கள்:
- நீரிழிவு நிலையுள்ள மக்களுள் 36.3% நபர்கள் இரத்த சர்க்கரை அளவை சிறப்பான கட்டுப்பாட்டில் வைத்துள்ளனர், 48.8% நபர்கள் இரத்த அழுத்தத்தின் மீது நல்ல கட்டுப்பாட்டையும் மற்றும் 41.5% நபர்கள் எல்டிஎல் கொழுப்பு கட்டுப்பாட்டையும் கொண்டிருந்தனர்.
- உயர்கல்வி, ஆண்கள், கிராமப்புறங்களில் வசிப்பவர்கள் மற்றும் குறைவான காலஅளவில் நீரிழிவு நிலையுள்ளவர்கள் ஆகிய அம்சங்கள், நீரிழிவு சிகிச்சையின் ஒருங்கிணைந்த இலக்குகளில் சிறப்பான அளவோடு தொடர்புடையதாக இருக்கின்றன.
- இரத்த சர்க்கரை அளவைப் பராமரிக்க ஒரு இரத்த சர்க்கரை அளவீடு சாதனத்தை தாங்கள் வீட்டில் பயன்படுத்துவதாக இம்மக்களுள் 16.7% நபர்கள் தெரிவித்துள்ளனர். இன்சுலின் செலுத்திக் கொள்பவர்களுள் வெறும் 36.9% நபர்கள் மட்டுமே இரத்த சர்க்கரை அளவை சுயமாக கண்காணிப்பதை மேற்கொள்கின்றனர்; நீரிழிவு உள்ளவர்கள் அனைவரும் அவர்களது இரத்த சர்க்கரை அளவை உரிய காலஅளவுகளில் சுய பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற வழிகாட்டல்கள் வழங்கப்பட்டிருந்த போதிலும் அனைவரும் இதை செய்வதில்லை.
- நீரிழிவு நிலையுள்ள நபர்களுள் 20% – க்கும் குறைவான நபர்களே ஒவ்வொரு நாளும் பழங்கள் மற்றும் காய்கறிகளின் மூன்று பரிமாறல் அளவுகளை உட்கொள்வதாக தெரிவித்துள்ளனர் (ஒரு நாளுக்கு ஐந்து பரிமாறல் அளவுகள் என்ற உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைப்புடன் ஒப்பிடுகையில்)
- நீரிழிவு நிலை உள்ளவர்களுள் 25%-க்கும் குறைவானவர்கள் மட்டுமே மிதமானதிலிருந்து, கடுமையான உடற்பயிற்சி / உடலுழைப்பு செயல்பாடுகளை மேற்கொண்டிருக்கின்றனர்.
இந்த ஆய்வின் முதன்மை ஆசிரியரும் மற்றும் டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் நிர்வாக இயக்குனரும் மற்றும் மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் துணைத் தலைவருமான டாக்டர். ஆர்.எம். அஞ்சனா இதுதொடர்பாக கூறியதாவது:
இந்தியாவில் மக்கள்தொகை அடிப்படையில் தேசிய அளவில் ஒரு பிரதிநிதித்துவ ஆய்வில் HbA1c, இரத்த அழுத்தம் மற்றும் எல்டிஎல் கொழுப்பு போன்ற நீரிழிவு சிகிச்சை இலக்குகளை அடைவது மீது புதிய தரவுகளை இந்த ஆய்வின் கண்டறிதல் முடிவுகள் வழங்குவதால் இவைகள் அதிக முக்கியத்துவம் உள்ளவையாக இருக்கின்றன. நீரிழிவு நிலை இருப்பதாக சுயமாக தெரிவித்த நபர்களுள் மூன்றில் ஒரு பங்கினர் நல்ல இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கின்றனர் மற்றும் பாதிக்கும் சற்றுக் குறைவானர்கள் மட்டுமே இரத்த அழுத்தம் மற்றும் எல்டிஎல் கொழுப்பு அளவில் நல்ல கட்டுப்பாட்டையும் பேணி வருகின்றனர் என்று நாங்கள் இந்த ஆய்வில் கண்டறிந்திருக்கிறோம். பிராந்தியங்கள் மற்றும் மாநிலங்களுக்கிடையே கணிசமான அளவு வேறுபாடுகள் இருப்பதும் அறியப்பட்டுள்ளது. ஆகவே, ஆரோக்கியமான உணவு மற்றும் உடற்பயிற்சி / உடலுழைப்பு செயல்பாட்டின் முக்கியத்துவம் குறித்து இந்திய மக்கள் மத்தியில் விழிப்புணர்வை அதிகரிப்பதற்கு உடனடி, அவசரத்தேவை இருக்கிறது. இதை அரசு சார்ந்த மற்றும் அரசு சாராத முகமைகள் தீவிரமாக முன்னெடுக்க வேண்டும்.”
இந்த ஆய்வின் முதுநிலை ஆசிரியரும் மற்றும் டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையத்தின் தலைவர் மற்றும் மெட்ராஸ் டயாபடீஸ் ரிசர்ச் ஃபவுண்டேஷனின் தலைவருமான டாக்டர். வி. மோகன் இதுகுறித்து மேலும் பேசுகையில்:
“நீரிழிவு நிலையுள்ள இந்திய மக்கள் மத்தியில் இரத்த சர்க்கரை அளவு, இரத்த அழுத்தம் மற்றும் கொழுப்பு ஆகியவற்றை கட்டுப்படுத்துவது உகந்த நிலையை விட குறைவாகவே இருப்பதை எமது இந்த ஆய்வின் முடிவுகள் சுட்டிக்காட்டுகின்றன. இந்தியாவில் சுகாதாரம் என்பது ஒவ்வொரு மாநிலத்தின் முதன்மைப் பொறுப்பாக இருப்பதால், நீரிழிவு சிகிச்சை இலக்குகளை எட்டுவதில் பிராந்தியங்களுக்கிடையிலான மற்றும் மாநிலங்களுக்கிடையிலான வேறுபாடுகள் பற்றிய தகவலை எமது ஆய்வுத் தகவல் வழங்கியிருப்பதால், இந்தியாவில் நீரிழிவு சிகிச்சை வழங்கலையும் மற்றும் கண்காணிப்பையும் மேம்படுத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட கொள்கைகளை வகுப்பதில் அரசுகளுக்கு பெரும் உதவியாக இருக்கும்,” என்று கூறினார்.
நீரிழிவு சிகிச்சைக்கான இலக்குகளை எட்டுவதும், ஆரோக்கியமான நடத்தை நடைமுறைகளை கடைப்பிடிப்பதும் இந்தியாவில் உகந்த அளவைவிட குறைவாகவே இருப்பதை ஆய்வின் கண்டறிதல் முடிவுகள் வலுவாக சுட்டிக்காட்டுகின்றன. இந்திய மக்களில் நீரிழிவு தொடர்பான சிக்கல்களின் இடர்பாட்டை குறைக்க இரத்த சர்க்கரை, இரத்தஅழுத்தம் மற்றும் கொழுப்பு ஆகிய அளவுகளை சிறப்பாக கட்டுப்படுத்துவதற்கான அவசியம் இருப்பதை இந்த முடிவுகள் கோடிட்டுக் காட்டுகின்றன. இந்தியாவில் தொடக்கநிலை, இடைநிலை மற்றும் மூன்றாம் நிலை அளவுகளில் நீரிழிவு சிகிச்சைப் பராமரிப்பை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசு ஆகிய இரண்டும் கொள்கைகளை வகுத்து செயல்படுத்துவதற்கு இந்த ஆய்வு முடிவுகள் நிச்சயம் உதவும்.
டாக்டர். மோகன்ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையம் குறித்து:
தமிழ்நாட்டின் சென்னையில் தலைமையகத்தைக் கொண்டிருக்கும் டாக்டர். மோகன்’ஸ் நீரிழிவு சிறப்பு சிகிச்சை மையமானது (DMDSC), 1991-ம் ஆண்டில் நிறுவப்பட்டதாகும். இந்தியாவின் முன்னணி நீரிழிவு சிகிச்சை வழங்கல் நிறுவனமாகத் திகழும் இது, நீரிழிவு நோயாளிகளுக்கு விரிவான சேவைகளை வழங்கிவருகிறது. இந்தியாவில் 50 நீரிழிவு சிகிச்சை மையங்களையும் மற்றும் கிளினிக்குகளையும் கொண்டு நீரிழிவுக்கு முழுமையான சேவைகளை இது வழங்கி வருகிறது. இந்த சிகிச்சை மையங்களில் 10 லட்சத்துக்கும் அதிகமான நீரிழிவு நோயாளிகள், சிகிச்சைக்காக தங்களை பதிவுசெய்து கொண்டுள்ளனர். இம்மையமானது, முழுமையான நீரிழிவு சிகிச்சை, நீரிழிவால் பாதிக்கப்பட்ட கண்களுக்கான சிகிச்சை, நீரிழிவு கால் பராமரிப்பு சேவைகள், நீரிழிவு சார்ந்த இதய சிகிச்சை, நீரிழிவு சார்ந்த வாய் / பற்களுக்கான சிகிச்சை, முன்தடுப்பு பராமரிப்பு, உணவுமுறை ஆலோசனை மற்றும் ஒரு மிக நவீன பரிசோதனையகம் ஆகிய பிரிவுகளில் சிறப்பு கவனமும், நிபுணத்துவமும் கொண்டிருக்கிறது. இங்கு மருத்துவருடனான ஆலோசனை மற்றும் சிகிச்சைக்கான முன்பதிவுகளை 8939110000 என்ற எண்ணை தொடர்புகொள்வதன் வழியாக அல்லது www.drmohans.com என்ற இணையதளத்திற்கு விஜயம் செய்வதன் மூலம் செய்ய முடியும்.