சென்னை:
ஏசியன் இன்ஸ்டிட்டியூட் ஆஃப் நெஃப்ராலஜி அண்ட் யூரோலஜியின் (AINU) இந்தியாவின் முன்னணி சிறுநீரக பராமரிப்பு நிபுணர், சேலத்தை சேர்ந்த ஒரு வயது குழந்தையின் சிறுநீரகத்தில் இருந்த சிக்கலான சிறுநீரகக் கல்லை எடுத்து சாதனை படைத்துள்ளார். வெற்றிகரமான சிகிச்சையின் மூலம் மருத்துவ வரலாற்றில் ஒரு முக்கியமான மைல் கல்லை நம் தமிழ்நாடு எட்டியுள்ளது.
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் திடீரென குழந்தை சிறுநீர் கழிக்கும் போது இரத்தக் கசிவு ஏற்பட்டு இருந்தது. இதனைத் தொடர்ந்து குழந்தைக்கு தீராத வலியும் இருந்து வந்தது. பிறகு அந்த குழந்தை மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டு CT ஸ்கேன் எடுக்கப்பட்டன. CT ஸ்கேன் படங்களின் படி, இடது சிறுநீரகத்தில் கணிசமான அளவில் 12 மிமீ அளவில் சிறுநீரக கல் இருப்பது தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்ட குழந்தை சிறு வயது என்பதால் இது மருத்துவர்களுக்கே மிகப்பெரிய சவாலாக அமைந்தது. எனவே டாக்டர்கள் உட்பட AINU இன் நிபுணர் மருத்துவக் குழுவும் ஒன்றாக இணைந்து ஆலோசனை நடத்தினார்கள். AINU வின் மேலாண்மை இயக்குநர் அருண் குமார், நிர்வாக இயக்குநர்டாக்டர் வெங்கட சுப்ரமணியம், குழந்தை சிறுநீரக தடவியல் மருத்துவர் டாக்டர் ரமேஷ் பாபு போன்றவர்கள் இணைந்து இந்த ஒரு வயது குழந்தைக்கு லேசர் சிகிச்சையை மேற்கொண்டனர்.