கருணாநிதி பிறந்தநாளில் கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்!

10

கருணாநிதி பிறந்தநாளில் கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும்!

தூத்துக்குடியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பிரசாரம் மேற்கொண்டார்.

அப்போது அவர் பேசியதாவது: 50 ஆண்டுகளாக அரசியலில் ஈடுபட்டு பல்வேறு மக்கள் பணிகளை ஆற்றிக்கொண்டிருக்கிறேன்.

நான் கொளத்தூர் தொகுதிக்கு மட்டுமல்ல தமிழகத்திற்கே வேட்பாளர். தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மக்கள் மறக்க முடியுமா. ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அறவழியில் போராடியவர்களில் 13 பேரை சுட்டுக்கொன்றனர்.

இது குறித்து முதல்வரிடம் கேட்டதற்கு அப்படியா, டிவியில் தான் பார்த்தேன் என்று சொன்னார். அவர் முதல்வர் பதவியில் நீடிக்கலாமா?. பலியானோர் குடும்பத்தினருக்கு தகுதியில்லாத வேலையை கொடுத்தனர். 10 ஆண்டுகளாக எதுவும் செய்யாமல், தேர்தல் நேரத்தில் பல இடங்களில் அடிக்கல் நாட்டுகின்றனர்.

திமுக ஆட்சியில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. எங்கள் ஆட்சியில் தான் தூத்துக்குடி, மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. அதிமுக அரசின் சாதனைகளையும், திட்டங்களையும் சொல்லி பழனிசாமியால் வாக்கு சேகரிக்க முடியுமா? மே 2ல் தேர்தல் முடிவு வெளியாகி நாங்கள் பதவியேற்றதும் ஜூன் 3ம் தேதி கருணாநிதி பிறந்தநாளில் கொரோனா நிவாரணமாக ரூ.4 ஆயிரம் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here