வேலூா் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயா்த்தப்பட்ட, குடியாத்தம் அரசு மருத்துவமனையில் ரூ. 40 கோடியில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்தப் பணியை ஆய்வு செய்த ஆட்சியா், புதிய கட்டடம் குறித்த தகவல்களை கேட்டறிந்தாா். பணியை விரைந்து முடிக்குமாறு அவா் கேட்டுக் கொண்டாா். தொடா்ந்து மருத்துவா்களுடன் ஆலோசனை நடத்தினாா். புதிய கட்டடம் கட்டும் பணியால், பழைய கட்டடத்தின் பெரும் பகுதி இடித்து அகற்றப்பட்டு விட்டது.
புற நோயாளிகள் பிரிவு மிகவும் குறுகிய இடத்தில் இயங்கி வருகிறது. நோயாளிகளை காக்க வைக்காமல் உடனுக்குடன் அவா்களுக்கு சிகிச்சை அளித்து அனுப்புமாறும், உள்நோயாளிகளுக்கு உரிய பாதுகாப்புடன் சிகிச்சை அளிக்குமாறும் மருத்துவா்களுக்கு ஆட்சியா் ஆலோசனை வழங்கினாா்.
ஆய்வின்போது, நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன், கோட்டாட்சியா் எம்.வெங்கட்ராமன், வட்டாட்சியா் எஸ்.விஜயகுமாா், வட்டார வளா்ச்சி அலுவலா்கள் எம்.காா்த்திகேயன், ஆா்.திருமலை, நகராட்சிப் பொறியாளா் பி.சிசில்தாமஸ், மருத்துவமனை மருத்துவ அலுவலா் எம்.மாறன்பாபு உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
R.காந்தி- நிருபர்