மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் கலைப்புலி எஸ் தாணு தயாரித்த கர்ணன் திரைப்படம் நேற்று வெளிவந்தது. இந்த திரைப்படத்தை தமிழகத்தில் 525 திரையரங்குகளில் திரையிட்டு உள்ளனர். இதன் மூலம் முதல் நாள் வசூலில் கர்ணன் திரைப்படம் சாதனை செய்திருப்பதாக கூறப்படுகிறது. குறிப்பாக தனுஷ் நடித்த திரைப்படங்களிலேயே முதல் நாள் வசூலில் அதிக வசூல் ஈட்டிய திரைப்படம் என்ற பெருமையை ’கர்ணன்’ பெற்றுள்ளது என்று வினியோகஸ்தர்கள் கூறுகின்றனர்.
குறிப்பாக சென்னை, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட பகுதிகளில் கர்ணன் பெரும் வசூலை ஈட்டியுள்ளது. இதற்காக திருச்சி விநியோகஸ்தர் முருகானந்தம், சேலம் விநியோகஸ்தர் 7ஜி சிவா உள்ளிட்டோர் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணுவிற்கு மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்.