திண்டுக்கல் மாவட்டம் , குஜிலியம்பாறை , பூங்கா நகரில் குடிநீர் மற்றும் விளக்கு வசதி இல்லாமல் அப்பகுதி மக்கள் அவதிப்பட்டு வருகின்றனர். 

இதை பற்றி இப்பகுதி மக்கள் கூறியிருப்பதாவது:

திண்டுக்கல் மாவட்டம் , குஜிலியம்பாறை கரிக்காலி செல்லும் வழியில் , பூங்கா நகர் இருக்கிறது. இந்நகரில் சுமார் 10 வருட காலமாகவே குடிநீர் தண்ணீர் மற்றும் தெரு விளக்கு இல்லாததால் அவதிபட்டு வருகின்றோம். இதனால் தெருவிளக்கு இல்லாத காரணத்தினால் இரவில் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர் . சில சமயங்களில் விஷ பூச்சிகளினால் உயிர் இழக்கும் அபாயம் கூட ஏற்படுகின்றது . இந்நகரில் தண்ணீர் பற்றாக்குறைகள் காரணமாக 5 கி.மீ ., சென்று தண்ணீர் எடுக்கும் சூழல் உள்ளது.  இதனால் நாங்கள் பெரிதும் அவதிபடுகின்றோம்.  இது குறித்து தாலுகா மற்றும் பஞ்சாயத்து அலுவலகங்களில் மனு கொடுத்தும் எந்த ஒரு சரியான பதிலும் அளிக்கவில்லை. அரசு அதிகாரிகள் இது தொடர்பாக எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல் மெத்தனம் காட்டி வருகின்றனர் .இப்படியே சென்றால் எங்கள் வாழ்வாதாரம் கேள்வி குறியாக மாறிவிடும். என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர். 

பஞ்சாயத்து தலைவர், தாலுக்கா அதிகாரிகள், நடவடிக்கை எடுப்பார்களா? பார்ப்போம்.

                                                                                    -எமது நிருபர், அரவிந்த்   

 

 

 

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here