தி.மு.க ஆட்சியின் விலைவாசி உயர்வை கண்டித்து அ.தி.மு.க இ.பி.எஸ் அணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்!

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் பிரதான தாராபுரம் சாலை ரவுண்டானாவில் அதிமுக இபிஎஸ் அணி நகரக் கழக செயலாளர் நடராஜ் தலைமையில் தமிழக அரசின் விலைவாசி உயர்வை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் பால் விலை உயர்வு,மின் கட்டணம்,கட்டுமான பொருட்கள், சொத்து வரி, மற்றும் பல்வேறு விலைவாசி உயர்வுகளை கண்டித்து மாநில இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளரும் வேடசந்தூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் பரமசிவம் கலந்துகொண்டு கண்டனப் பேருரை நிகழ்த்தினார்.

இதில் ஒட்டன்சத்திரம் மேற்கு ஒன்றிய செயலாளர் பாலசுப்ரமணியம், கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.பி. நடராஜ்,திண்டுக்கல் மாவட்ட கழக பொருளாளர் பழனிவேல்,தொப்பம்பட்டி கிழக்கு ஒன்றிய செயலாளர் அப்பன் என்ற கருப்புசாமி, மேற்கு ஒன்றிய செயலாளர் சண்முகராஜா, கீரனூர் பேரூர் கழகச் செயலாளர் குப்புசாமி,கழகப் பொதுக்குழு உறுப்பினர் உதயம் ராமசாமி, ஒட்டன்சத்திரம் கிழக்கு ஒன்றிய துணை செயலாளர் செல்வராஜ், மற்றும் மாவட்ட ,ஒன்றிய,நகர, நிர்வாகிகள் தொண்டர்கள் மேலும் பெண்கள் ஆண்கள் என சுமார் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Iruthi Theerppu: IRUTHI THEERPPU OFFICE 044-35720178