கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே பள்ளி மாணவிக்கு வாட்ஸ்அப் மூலம் ஆபாச புகைப்படங்கள் அனுப்பி பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.
பண்ருட்டி அருகே முத்தாண்டிகுப்பம் கிராமத்தை சேர்ந்த கோகுல் அதே பகுதியை சேர்ந்த 12ஆம் வகுப்பு படித்து வரும் பள்ளி மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்தார். தொடர்ந்து அதை மாணவிக்கு அனுப்பி, சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பரப்பி விடுவேன் என கூறி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார்.
இது குறித்து மாணவி தனது உறவினரிடம் தெரிவித்தார். அவர் அளித்த புகாரின் பேரில் பண்ருட்டி அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தில் இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.