இந்தியா – இலங்கை இடையிலான ஒருநாள் கிரிக்கெட் தொடர், வரும் 17ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட வாய்ப்பு உள்ளதாக, பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். 

ஷிகர் தவான் தலைமையிலான 2ஆம் தர இந்திய அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 ஒருநாள் போட்டி மற்றும் மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாட உள்ளது.

முதலாவது ஒருநாள் போட்டி வருகிற 13ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், இலங்கை அணியின் பேட்டிங் பயிற்சியாளர் கிராண்ட் ஃபிளவர், அந்த அணியின் டேட்டா அனலிஸ்ட் நிரோஷன் ஆகிய இருவருக்கும் கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது. பரிசோதனையில், மேலும் சில வீரர்களுக்கு தொற்று பாதிப்பு ஏற்படலாம் என்ற அச்சம் நிலவுவதால், போட்டியை, ஒத்தி வைப்பதாக கங்குலி கூறியுள்ளார்.