இந்தியாவில் வரும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 50 ஓவர் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற உள்ளது. இந்த தொடரில் இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன.

இதற்கான வீரர்களை தேர்வு செய்யும் பணியில் அணிகள் தீவிரம் காட்டி வருகின்றன. இந்த நிலையில், இலங்கை கண்டி நகரில் தேர்வு குழுத் தலைவர் அஜித் அகர்கர், கேப்டன் ரோகித் சர்மா ஆகியோர் கூட்டாக இந்திய அணியை அறிவித்தனர். 

15 பேர் கொண்ட இந்திய அணியில், ஹர்திக் பாண்டியா துணை கேப்டனாக செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. கே.எல்.ராகுல், இஷான் கிஷன், சுப்மன் கில், விராட் கோலி, ஸ்ரேயாஸ் ஐயர், சூர்யகுமார் யாதவ், பும்ரா, முகமது ஷமி ஆகியோர்  அணியில் இடம்பெற்றுள்ளனர்.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட சஞ்சு சாம்சனுக்கு அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. தற்போது நடைபெற்று வரும் ஆசிய கோப்பை தொடரில் காயம் காரணமாக விளையாடாமல் இருக்கும் கே.எல்.ராகுலுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. 

அவர் உடற்தகுதி எட்டாத நிலையில், அணியில் வாய்ப்பு அளித்தது ஏன்? என கிரிக்கெட் விமர்சகர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here