நியூயார்க்:
2021ஆம் ஆண்டு இறுதி வரை கொரோனா பாதிப்பு நீடிக்கும் என்று அமெரிக்க மருத்துவ வல்லுனரான அந்தோனி பாவுசி எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இது குறித்து அவர் கூறுகையில்:
“தினமும் 40 ஆயிரம்பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கப்படுகின்றனர். தினம்தோறும் ஆயிரம் பேர் உயிரிழக்கின்றனர். கொரோனா வைரஸ் பாதிப்புக்கு முன்னர் நாம் இருந்த இயல்பு நிலைக்கு திரும்புவதை பற்றி நீங்கள் பேசுகிறீர்கள் என்றால் அது 2021-ம் ஆண்டுக்குள் இருக்கும். அல்லது 2021-ம் ஆண்டின் இறுதியில் கூட இருக்கலாம். என்னை அரசு நிர்வாகம் அமைதியாக இருக்கும்படி கூறும் தகவலில் உண்மை இல்லை” என்று தெரிவித்தார்.
மேலும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டு வந்திருப்பதாக அதிபர் டிரம்ப் கூறியதை அவர் மறுத்துள்ளார்.
அமெரிக்காவில் கொரோனா வைரசின் பாதிப்பு அதிகரித்தபடியே உள்ளது. அங்கு இதுவரை 66,76,601 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும் 1,98,128 பேர் கொரோனா தொற்றுக்கு பலியாகி இருக்கிறார்கள்.