இந்தியாவில் கொரோனா வைரசின் 2-வது அலை காட்டுத்தீ போல பரவி வருகிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்படுவர்களின் எண்ணிக்கை தினம் தினம் புதிய உச்சத்தை எட்டி வருகிறது.
கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 3 லட்சத்து 49 ஆயிரத்து 691- பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பால் இதுவரை இல்லாத அளவாக இன்று 2,767-பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிப்பில் இருந்து நேற்று குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்து 17 ஆயிரத்து 113- ஆக உள்ளது.
நாட்டில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 69 லட்சத்து 60 ஆயிரத்து 172- பேர் ஆக உயர்ந்துள்ளது. தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 40 லட்சத்து 85 ஆயிரத்து 110- ஆக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 1 லட்சத்து 92 ஆயிரத்து 311- ஆக உயர்ந்துள்ளது. தொற்றுக்கு சிகிச்சை பெறுபவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரமாக உள்ளது.