தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 1,009 பேர் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர்.
தமிழகத்தில் இன்று அதிகபட்சமாக சென்னையில் 991 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. சென்னையை தவிர்த்து, இன்று, கோவையில் 440 பேருக்கும், சேலத்தில் 300 பேருக்கும், திருவள்ளூரில் 296 பேருக்கும், செங்கல்பட்டில் 279 பேருக்கும், கடலூரில் 263 பேருக்கும், விழுப்புரத்தில் 189 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 173 பேருக்கும், திருப்பூரில் 155 பேருக்கும், வேலூரில் 152 பேருக்கும் கொரோனா உறுதியாகியுள்ளது.
உயிரிழப்பு
இன்று சென்னையில் 11 பேரும், நாகப்பட்டினம், சேலத்தில் தலா 7 பேரும், கடலூரில் 6 பேரும், கன்னியாகுமரி, திருவள்ளூரில் தலா 4 பேரும், வேலூரில் 3 பேரும், செங்கல்பட்டு, கோவை, ஈரோடு, ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவண்ணாமலை, திருநெல்வேலியில் தலா 2 பேரும், அரியலூர், காஞ்சிபுரம், நாமக்கல், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பத்தூர், திருவாரூர், தூத்துக்குடியில் தலா ஒருவரும் என 64 பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர்.
டிஸ்சார்ஜ்
இன்று ஒரே நாளில் அதிகபட்சமாக சென்னையில் 1,009 பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர். அதற்கு அடுத்தபடியாக, இன்று சேலத்தில் 567 பேரும், கோவையில் 545 பேரும், கடலூரில் 476 பேரும், செங்கல்பட்டில் 362 பேரும், கள்ளக்குறிச்சியில் 252 பேரும், காஞ்சிபுரத்தில் 202 பேரும், தஞ்சாவூர் 197 பேரும், விழுப்புரத்தில் 171 பேரும் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.
மாவட்ட வாரியாக இன்றைய நிலவரம்
