இது தொடர்பாக தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா தொற்றுக்கு இதுவரை 26 லட்சத்து 66 ஆயிரத்து 964 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு ஒரே நாளில் 24 பேர் உயிரிழந்த நிலையில், இதுவரை பலியானவர்களின் மொத்த எண்ணிக்கை 35 ஆயிரத்து 627ஆக அதிகரித்துள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் ஆயிரத்து 607 பேர் நலம் பெற்று வீடு திரும்பியுள்ள நிலையில், இதுவரை 26 லட்சத்து 14 ஆயிரத்திற்கும் அதிகமானோர் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர். இதனிடையே, தமிழகத்தில் கொரோனா தினசரி பாதிப்பில் அதிகபட்சமாக சென்னையில் 188 பேருக்கும், கோவையில் 163 பேருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்றுக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 17 ஆயிரத்து 46ஆக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here