கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
 
தமிழகத்தில் நேற்று புதிதாக 1 லட்சத்து 25 ஆயிரத்து 4 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 10,239 ஆண்கள், 6,426 பெண்கள் என மொத்தம் 16 ஆயிரத்து 665 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் வெளிமாநிலங்களில் இருந்து வந்த 34 பேரும், 12 வயதுக்கு உட்பட்ட 571 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 2,335 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர்.
 
நேற்று அனைத்து மாவட்டங்களிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 4,764 பேரும், செங்கல்பட்டில் 1,219 பேரும், கோவையில் 963 பேரும், திருவள்ளூரில் 751 பேரும், நெல்லையில் 714 பேரும், தூத்துக்குடியில் 594 பேரும், குறைந்தபட்சமாக அரியலூரில் 62 பேரும், நீலகிரியில் 39 பேரும், பெரம்பலூரில் 18 பேரும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர்.
 
98 பேர் உயிரிழப்பு
 
தமிழகத்தில் இதுவரை 2 கோடியே 20 லட்சத்து 5 ஆயிரத்து 237 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு உள்ளது. இவர்களில் 11 லட்சத்து 30 ஆயிரத்து 167 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 6 லட்சத்து 82 ஆயிரத்து 519 ஆண்களும், 4 லட்சத்து 47 ஆயிரத்து 610 பெண்களும், 3-ம் பாலினத்தவர் 38 பேரும் அடங்குவர்.
 
அதில் 12 வயதுக்கு உட்பட்ட 40 ஆயிரத்து 894 குழந்தைகளும், 60 வயதுக்கு மேற்பட்ட 1 லட்சத்து 57 ஆயிரத்து 392 முதியவர்களும் இடம் பெற்றுள்ளனர். கொரோனாவுக்கு அரசு மருத்துவமனையில் 51 பேரும், தனியார் மருத்துவமனையில் 47 பேரும் என 98 பேர் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளனர்.
 
அந்தவகையில் நேற்று சென்னையில் 32 பேரும், வேலூரில் 9 பேரும், திருவள்ளூர், செங்கல்பட்டில் தலா 8 பேரும், காஞ்சீபுரத்தில் 6 பேரும், சேலத்தில் 5 பேரும், நாமக்கலில் 4 பேரும், கன்னியாகுமரியில் 3 பேரும், கோவை, கடலூர், ஈரோடு, மதுரை, புதுக்கோட்டையில் தலா 2 பேரும், கரூர், கிருஷ்ணகிரி, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, தூத்துக்குடி, நெல்லை, திருப்பூர், திருச்சி, விழுப்புரம், விருதுநகரில் தலா ஒருவரும் என 25 மாவட்டங்களில் உயிரிழப்பு நிகழ்ந்து உள்ளது. தமிழகத்தில் இதுவரை 13 ஆயிரத்து 826 பேர் கொரோனா நோய் தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
 
15,114 பேர் ‘டிஸ்சார்ஜ்’
 
கொரோனா பாதிப்பில் இருந்து நேற்று 15,114 பேர் நேற்று ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகபட்சமாக சென்னையில் 4,647 பேரும், செங்கல்பட்டில் 1,438 பேரும், கோவையில் 991 பேரும், திருவள்ளூரில் 724 பேரும் அடங்குவர். இதுவரையில் 10 லட்சத்து 06 ஆயிரத்து 33 பேர் குணம் அடைந்து உள்ளனர். சிகிச்சையில் 1 லட்சத்து 10 ஆயிரத்து 308 பேர் உள்ளனர்.
 
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here