கொரோனா பாதிப்பு இவ்வளவா?! 

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், 4 வது நாளாக ஆயிரத்தை தாண்டியுள்ளது. இன்று (மார்ச்.,22) 1385 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.இதுவரை 8.47 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.சென்னை,கோவை, செங்கல்பட்டு, தஞ்சாவூர், திருவள்ளூர் பகுதியில் பாதிப்பு அதிகரித்து வருகிறது.

தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை

தமிழகத்தில் இன்று 1385 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,68,367 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 259 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-190) மூலமாக, இன்று மட்டும் 73,247 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை ஒரு கோடியே 88 லட்சத்து 54 ஆயிரத்து 356 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 817 பேர் ஆண்கள், 568 பேர் பெண்கள் என பாதிக்கப் பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,24,467 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,43,865 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 35 ஆகவும் உள்ளது.

                                          டிஸ்சார்ஜ்

இன்று மட்டும் 659 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 47 ஆயிரத்து 139 ஆக உள்ளது.இன்று மட்டும் கொரோனா பாதித்த 10 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 5 பேர் தனியார் மருத்துவமனையிலும் 5 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர்.இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 12,609 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 8,619 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

                                 மாவட்ட வாரியாக பாதிப்பு

latest tamil news
latest tamil news

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here