காரைக்குடி உட்கோட்டத்தில் Dr.R.ஸ்டாலின்,IPS. உதவி காவல் கண்காணிப்பாளர் அவர்களின் உத்தரவின் படி தனியார் பேருந்துகள் மற்றும் மினி பஸ் உரிமையாளர்களை அழைத்து போக்குவரத்து காவல் ஆய்வாளர் மற்றும் சார்பு ஆய்வாளர்கள் அவர்களின் தலைமையில் தெற்கு காவல் நிலையத்தில் வாகனங்களை முறையாக இயக்குவது குறித்து கலந்தாய்வு கூட்டம் நடத்தப்பட்டது.
இதில் காரைக்குடி நகர் பகுதிகள் மற்றும் கல்வி கூடங்களின் வழித்தடத்தில் இயக்கும் பஸ்கள் நிர்ணயிக்கப்பட்ட வேகத்தில் மட்டுமே இயக்க வேண்டும், நகர் பகுதிகளில் மக்களுக்கு அச்சுறுத்தும் வகையில் வாகனங்களை இயக்கக்கூடாது போன்ற பல்வேறு நிபந்தனைகளை விதிக்கப்பட்டது. இதற்கு பஸ் உரிமையாளர்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டுள்ளார்.