வேலூர்:
ஆவின் பால் கொள்முதல் விற்பனை உற்பத்தியாளர் ஒன்றிணைந்த வேலூர் மாவட்டத்தில் ஆவின் முகவர்கள் ஒன்று சேர்ந்து ஆவின் நிர்வாகத்தின் மீதான புகாரினை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் முன்னிறுத்தப்பட்டது.
முகவர்களின் கோரிக்கையானது: ஆவின் நிர்வாகத்தில் இருந்து வரும் பால் கசிந்து நிலையில் தொடர்ந்து வருவதால் முகவர்கள் பெரிதும் பாதிப்படைகிறார்கள் அதோடு வாடிக்கையாளர்களும் ஆவின் மீதான நற்பெயரை ஏற்க மறுக்கிறார்கள்.
பொதுமக்களிடம் ஆவின் பால் விற்பனை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது இதுபோன்ற பால் கசிந்து வரும் நிலையே மிக முக்கியமான காரணம்.
இந்நிலையை ஆவின் நிர்வாகத்திற்கு பலமுறை அனைத்து முகவர்களும் ஒன்று சேர்ந்து கோரிக்கை செய்தாலும் ஆவின் நிர்வாகம் கோரிக்கையை சரி செய்யாமல் முகவர்களுக்கு பெரிதும் நெருக்கடி கொடுக்கிறார்கள்.
இந்த நிலையை பால்வளத் துறை அமைச்சர் அவர்களிடமும் எடுத்துக் கூறியும் எந்த மாற்றமும் நிகழவில்லை என்று வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
வேலூர் செய்தியாளர்: R. காந்தி